திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தரிசன டிக்கெட் ஆன்லைனில் பத்தாம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி டிசம்பர் 23 ஜனவரி 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பத்து நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக 6.70 லட்சம் தரிசன டிக்கெட் 10 நாட்களில் வெளியிடப்பட உள்ளது. அதன்படி வரும் பத்தாம் தேதி முதல் 2.25 லட்சம் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதைப்போல் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் டிக்கெட்டுகளும் வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் பெற ரூபாய்.10000 உடன் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் ஏகாதசி நாட்களில் ஒன்பது மையங்களில் 100க்கும் மேற்பட்ட கவுண்டர்கள் மூலம் 4.25 லட்சம் நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.














