ஜம்மு மஜீன் பகுதியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜுன் 8ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
ஜம்முவின் மஜீன் பகுதியில் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்படுகிறது. இதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் பரப்பளவு நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த ஆண்டு வழங்கியது. இந்த இடத்தில் ரூ.30 கோடி மதிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கின. இந்நிலையில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் ஜுன் 8ம் தேதி கோயில் திறக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும். திருப்பதி கோயிலில் எந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைகள் இங்கும் பின்பற்றப்படும் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறினார்.