திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதனடிப்படையில், திண்டுக்கல் தனியார் பால் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரன், தனியார் பால் நிறுவனங்களுடன் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூர்வா சாவ்டா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தின் ஆவணங்களை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து வைஷ்ணவி என்ற நிறுவனம் நெய் விநியோக ஒப்பந்தம் பெற்றுள்ளது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்வதாக வைஷ்ணவி நிறுவனம் போலி ஆவணம் தயாரித்துள்ளது. இது விசாரணையில் தெரியவந்துள்ளது.