ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தரிசனம் செய்ய திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதியில் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கூடுதலாக இன்று ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
அதே போல் அக்டோபர் மாதத்திற்கான வாடகை அறைகள் முன்பதிவு 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக ஒரு நாளைக்கு 4000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. இது தவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் ஜூலை 25ஆம் தேதி காலை 10 மணி முதல் நுழைவு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.