திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் வரலாற்றுச் சாதனை

2024-25 நிதியாண்டில், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் மாபெரும் 68% பங்குடன் முக்கிய சாதனை பதிவு செய்துள்ளது. சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் வளர்ச்சி காட்டியது வர்த்தக உலகில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. 2024-25ம் நிதியாண்டில் இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் நகரம் முக்கிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டு, திருப்பூரில் இருந்து மட்டும் ரூ.40000 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 68 சதவீத பங்காகும். கடந்த ஆண்டு இது 54% […]

2024-25 நிதியாண்டில், இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் மாபெரும் 68% பங்குடன் முக்கிய சாதனை பதிவு செய்துள்ளது. சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் வளர்ச்சி காட்டியது வர்த்தக உலகில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது.

2024-25ம் நிதியாண்டில் இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் நகரம் முக்கிய சாதனையை படைத்துள்ளது. இந்த ஆண்டு, திருப்பூரில் இருந்து மட்டும் ரூ.40000 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 68 சதவீத பங்காகும். கடந்த ஆண்டு இது 54% மட்டுமே இருந்தது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதும், இந்த வளர்ச்சி வரலாற்று சாதனையாகும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் குமார் துரைசாமி தெரிவித்துள்ளார். வருகிற நாட்களில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தால், இந்த வளர்ச்சி இரட்டிப்பாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உதவியால் இந்த துறை இன்னும் தூரம் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu