தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு, தமிழக அரசின் துறை சார்ந்த வணிக நடவடிக்கைகளை கையாளும் ‘முகவர் வங்கி’யாக செயல்பட, மத்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது.
அண்மையில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பொது பங்கீட்டுக்கு வந்தது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு, ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு திட்டங்கள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையில், 2 நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தத்திலும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, மேக்ஸ் லைஃப் காப்பீடு நிறுவனம் மற்றும் சோழமண்டலம் எம்எஸ் காப்பீடு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் வங்கியின் கிளைகளை விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ‘முகவர் வங்கி’ அங்கீகாரம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.