தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஐபிஓ நிலவரம்

September 6, 2022

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது பங்கீடு, திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. முதல் நாளில் 83% பங்குகள் விற்பனையாகி உள்ளன. தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் மிகவும் பழமையானதாகும். விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வழங்குவதில் இந்த வங்கி முதன்மையாகத் திகழ்கிறது. இந்த வங்கிக்கு மொத்தம் 509 கிளைகள் உள்ளன. அவற்றுள் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும், 247 கிளைகள் சிறு நகரங்களிலும், […]

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது பங்கீடு, திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. முதல் நாளில் 83% பங்குகள் விற்பனையாகி உள்ளன.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் மிகவும் பழமையானதாகும். விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வழங்குவதில் இந்த வங்கி முதன்மையாகத் திகழ்கிறது. இந்த வங்கிக்கு மொத்தம் 509 கிளைகள் உள்ளன. அவற்றுள் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும், 247 கிளைகள் சிறு நகரங்களிலும், 80 கிளைகள் பெருநகரங்களிலும், 76 கிளைகள் மெட்ரோபொலிட்டன் நகரங்களிலும் செயல்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில், இந்த வங்கியின் நிகர லாபம் ரூ. 821.91 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டில், வங்கியின் நிகர லாபம் 603.33 கோடி ரூபாயாக இருந்தது. எனவே, கடந்த வருடத்தில், 36% வளர்ச்சியை இந்த வங்கி நிறுவனம் பதிவு செய்துள்ளது. மேலும், இந்த வங்கிக்கு, வட்டி மூலமாக கிடைக்கும் வருவாய் 18% உயர்ந்து, 1815.23 கோடியாக உள்ளது. தற்போது, முதல் முறையாக, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, பொது பங்கீட்டு முறைக்கு வந்துள்ளது. இதில், வங்கியின் ஒரு பங்கின் விலை 500 முதல் 525 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது பங்கீட்டின் மூலம், இந்த வங்கி 831.6 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இந்த நிதி, வங்கியின் முதல் அடுக்கு முதலீட்டுத் தொகையை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொது பங்கீட்டிற்கான 3 நாள் சாளரத்தில், முதல் நாளான திங்கட்கிழமை அன்று, 83% பங்குகள் பெறப்பட்டுள்ளன. மேலும், சில்லறை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 1.5% பங்குகள் கூடுதலாக பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu