தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 22 வரை நடைபெறும் என அறிவிப்பு

February 12, 2024

2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 22 வரை நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றினார். தமிழக அரசு தயாரித்த உரையில் உடன்பாடு இல்லை என கூறிய அவர், 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். அதன் பிறகு பேசிய சட்டப்பேரவை தலைவர் திரு. அப்பாவு, பிப்ரவரி […]

2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 22 வரை நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றினார். தமிழக அரசு தயாரித்த உரையில் உடன்பாடு இல்லை என கூறிய அவர், 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். அதன் பிறகு பேசிய சட்டப்பேரவை தலைவர் திரு. அப்பாவு, பிப்ரவரி 13, 14 தேதிகளில் ஆளுநர் உரை மீதான விவாதமும், 15ஆம் தேதி பதிலுரையும் நிகழும் என அறிவித்தார். மேலும், பிப்ரவரி 19 ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையும், பிப்ரவரி 20 ஆம் தேதி விவசாய பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu