இஸ்ரோ ராக்கெட்டில் தமிழக கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு

February 23, 2024

தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பில் பங்களிப்பு செய்துள்ளனர். சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி மாணவர்கள், இஸ்ரோ திட்டங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்திற்கு ஸ்டெப்பர் மோட்டார் வடிவமைத்து தந்த மாணவர்கள், அண்மையில் இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் திட்டத்திலும் பங்களிப்பு செய்துள்ளனர். ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜனிக் கட்டத்தில், ஸ்டெப்பர் மோட்டார் பயன்பாடு மிக முக்கியமானது. இந்த கட்டத்தில் […]

தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பில் பங்களிப்பு செய்துள்ளனர்.

சேலத்தில் உள்ள சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி மாணவர்கள், இஸ்ரோ திட்டங்களுக்கு பங்களிப்பு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்திற்கு ஸ்டெப்பர் மோட்டார் வடிவமைத்து தந்த மாணவர்கள், அண்மையில் இன்சாட் 3 டி எஸ் செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 14 ராக்கெட் திட்டத்திலும் பங்களிப்பு செய்துள்ளனர். ராக்கெட் ஏவுவதற்கான கிரையோஜனிக் கட்டத்தில், ஸ்டெப்பர் மோட்டார் பயன்பாடு மிக முக்கியமானது. இந்த கட்டத்தில் தேவைப்படும் பல்வேறு மோட்டார்களை மாணவர்கள் வடிவமைத்து வழங்கி உள்ளனர். இது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் விஞ்ஞானிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டது. ககன்யான் உள்ளிட்ட இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களிலும் தங்கள் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு இருக்கும் என சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி துணைவேந்தர் சொக்கு வள்ளியப்பா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu