தமிழகத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் தமிழில் பெயர்களை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கட்டாயமாக பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிட மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் வழக்கு விசாரணையில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் ரூபாய் 50-ல் இருந்து 2000 வரை அபராத தொகையை உயர்த்த விரைவில் அரசாணை வெளியிட இருப்பதாக தாக்கல் செய்து அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் எத்தனை என்பதையும், இதுவரை எவற்றிற்கு எவ்வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்தும் விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.