ஒடிசா நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்

May 28, 2024

தமிழ்நாடு மின்சார வாரியம், ஒடிசாவில் உள்ள சகிகோபால் ககுருக்கி நிலக்கரி சுரங்கத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்களுக்கு கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் இந்த சுரங்கத்தை வாங்குவதாக கூறியுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் ஒடிசாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கும் என தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 1950 ஏக்கர் கொண்ட இந்த நிலக்கரி சுரங்கத்தின் மூலம் 4500 முதல் 5200 டன் வரையிலான நிலக்கரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த […]

தமிழ்நாடு மின்சார வாரியம், ஒடிசாவில் உள்ள சகிகோபால் ககுருக்கி நிலக்கரி சுரங்கத்தை வாங்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாரியத்தின் அனல் மின் நிலையங்களுக்கு கூடுதல் நிலக்கரி தேவைப்படுவதால் இந்த சுரங்கத்தை வாங்குவதாக கூறியுள்ளது.

வரும் ஜூன் மாதத்தில் ஒடிசாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கும் என தகவல் வெளிவந்துள்ளது. சுமார் 1950 ஏக்கர் கொண்ட இந்த நிலக்கரி சுரங்கத்தின் மூலம் 4500 முதல் 5200 டன் வரையிலான நிலக்கரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தை ஏலம் எடுக்க மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், 2 முறை ஏலம் விடப்பட்டும் தமிழக மின்சார வாரியம் தவிர வேறு எந்த நிறுவனமும் ஏலத்துக்கு விண்ணப்பிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu