தமிழகத்திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்புகிருஷ்ணராஜசாகர்

கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் , மண்டியா உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.55 அடியாக உயர்ந்துள்ளது. […]

கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் தமிழகத்திற்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கும் மேலாக கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் , மண்டியா உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 124 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 110.55 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல் மைசூர் மாவட்டத்தில் 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையில் நீர்மட்டம் 2,283 அடியாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu