சென்னையில் 78 சார் பதிவாளர்கள் இடமாற்றம்

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இவற்றின் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை மண்டலத்தை சேர்ந்த 36 மாவட்ட பதிவாளர்கள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்றைய தினம் 78 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து, 55 சார் பதிவாளர்கள் வெளியூருக்கு […]

தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இவற்றின் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை மண்டலத்தை சேர்ந்த 36 மாவட்ட பதிவாளர்கள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து, இன்றைய தினம் 78 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மண்டலத்திலிருந்து, 55 சார் பதிவாளர்கள் வெளியூருக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், வெளியூர்களிலிருந்து 23 சார்பதிவாளர்கள் சென்னை மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், அதிக எண்ணிக்கையிலான பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் இடமாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேலும், இந்த இடமாற்றம் மற்ற அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu