டி.என்.பி.எல் கிரிக்கெட்: திண்டுக்கல் அணி 8 வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணி திருப்பூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. சேலத்தில் கடந்த ஐந்தாம் தேதி 8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. அதில் 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றது. அதில் நேற்றைய ஆட்டத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதியது. இதன் போட்டியின் தொடக்கத்தில் மழை பெய்ததால் ஆட்டம் […]

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணி திருப்பூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

சேலத்தில் கடந்த ஐந்தாம் தேதி 8 அணிகள் பங்கேற்றுள்ள 8வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. அதில் 9 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது லீக் ஆட்டங்கள் கோவையில் நடைபெற்று வருகின்றது. அதில் நேற்றைய ஆட்டத்தில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதியது. இதன் போட்டியின் தொடக்கத்தில் மழை பெய்ததால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 109 ரன்கள் என்று இலக்குடன் களம் இறங்கிய திண்டுக்கல் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் 11.5 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu