2026 வரை நிரப்பத் திட்டமிட்ட பணியிடங்களை ஏற்கனவே நிரப்பி முடித்துவிட்டது டி.என்.பி.எஸ்.சி., மேலும் காலியிடங்களை நிரப்பும் பணியும் தொடர்கிறது.
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 17,595 பணியிடங்களை 2026 ஜனவரிக்குள் நிரப்ப திட்டமிட்டது. ஆனால், தற்போது டி.என்.பி.எஸ்.சி. அதனை 7 மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளது. 2024 ஜூன் முதல் 2025 ஜூன் வரைவே 17,702 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்வர்களின் நலன் கருதி தேர்வு செயல்முறைகள் வேகமாக நடந்து வரும் நிலையில், கூடுதலாக 2,500-க்கும் மேலான பணியிடங்களுக்கான தேர்வும் நடைபெற்று வருகிறது. இது அரசு வேலை எதிர்பாரும் இளைஞர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.