டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணை வெளியீடு

April 25, 2024

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையில் குரூப் 4 தேர்வு 6244 பணியிடங்களுக்காக ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 2030 பணியிடங்களுக்காக செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. குரூப் 1, 1 பி மற்றும் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப்-1 முதல் நிலை தேர்வு 90 பணியிடங்களுக்காக ஜூலை […]

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையில் குரூப் 4 தேர்வு 6244 பணியிடங்களுக்காக ஜூன் 9ம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு 2030 பணியிடங்களுக்காக செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது. குரூப் 1, 1 பி மற்றும் 1 சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப்-1 முதல் நிலை தேர்வு 90 பணியிடங்களுக்காக ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் ஒன் பி மற்றும் குரூப் சி தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெறுகிறது.

அதேபோன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு பட்டம்/ முதுகலை பட்டப்படிப்பு நிலை(நேர்காணல் பதவி) தேர்வு நடைபெறுகிறது.அக்டோபர் 10ஆம் தேதி 605 பணிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு பட்டம்/ முதுகலை பட்டப்படிப்பு (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு நடைபெறுகிறது. நவம்பர் 17ஆம் தேதி 730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு டிப்ளமோ, ஐடிஐ நிலை தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 14ஆம் தேதி 50 பணியிடங்களுக்கான வழக்கு துறையில் உள்ள அரசு வழக்கறிஞர் தரம் II முதன்மை தேர்வு நடைபெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu