டி. என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
டி. என்.பி.எஸ்.சி குரூப் 2 பொதுவான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் 09.30 மணிக்கு தொடங்கும். தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் 08.30 மணிக்கு முன்பே தேர்வுக்கூடத்திற்குள் இருக்க வேண்டும். சலுகை நேரம் 09.00 மணிக்கு முடிவடைகிறது. தேர்வர்கள் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமை போன்ற அடையாளங்களை கொண்டு வர வேண்டும். மேலும் மின்னணு சாதனங்களை, புத்தகங்களை மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.