தமிழகத்தின் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடக்க இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2222 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு ஜனவரி மாதம் ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவற்றில் தமிழில் 371 காலி பணியிடங்களும், ஆங்கிலத்தில் 214 பணியிடங்களும், கணிதத்திற்கு 200 பணியிடங்களும், இயற்பியலுக்கு 274 பணியிடங்களும், வேதியியலில் 273 பணியிடங்களும், வரலாறுக்கு 346 பணியிடங்கள் என 2222 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதி பட்டப்படிப்பு மற்றும் பி எட் முடித்திருக்க வேண்டும். மேலும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.














