அதானி குழுமம் - 7374 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தியது

March 8, 2023

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியாக, அதானி குழுமம், 7374 கோடி மதிப்பிலான கடன் தொகையை திருப்பி செலுத்தி உள்ளது. முதிர்வு தேதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்மாத இறுதிக்குள், அதானி குழும பங்குகள் மீதான அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிகழாண்டில், 3வது முறையாக, அதானி குழுமம் […]

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் முயற்சியாக, அதானி குழுமம், 7374 கோடி மதிப்பிலான கடன் தொகையை திருப்பி செலுத்தி உள்ளது. முதிர்வு தேதிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்மாத இறுதிக்குள், அதானி குழும பங்குகள் மீதான அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிகழாண்டில், 3வது முறையாக, அதானி குழுமம் கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தி உள்ளது. இதன் மூலம், சர்வதேச மற்றும் தேசிய முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளித்த நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை பெற முயற்சித்து வருகிறது. அதே வேளையில், ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu