சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு தகுந்தவாறு, இந்தியாவில், தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அந்த வகையில், தொடர்ந்து 4 நாட்களாக, இந்தியாவில், தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் குறைந்துள்ளது. எனவே, ஒரு கிராம் தங்கம் இன்று 5280 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 42240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், இன்றைய தினம், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் 71.8 ஆகவும், ஒரு கிலோ 71800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் 45136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.














