இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணை திறப்பு விழாவிற்கு சென்றார். அப்பொழுது நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவு துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது திடீரென மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் […]

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணை திறப்பு விழாவிற்கு சென்றார். அப்பொழுது நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அவருடன் ஈரான் வெளியுறவு துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர். அப்போது
திடீரென மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் மாயமானது. இதனை தொடர்ந்து ஈரான் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் பணியில் ஈரானின் கிழக்கு அஜர்பைதான் மாகாணம் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. அவருடன் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனை ஒட்டி ஈரான் அதிபர் மரணத்திற்கு ஈரானில் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கப்படும் எனவும், அலுவல் தொடர்பான எந்த அரச நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu