தமிழகத்தில் இன்று ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அறிவித்தார்.இதற்கிடையே கோவை - சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி - வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.