பாராளுமன்ற சபாநாயகர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
பாராளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக பாராளுமன்ற சபாநாயகர் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிகரா எம்.பி கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னதாக 1952 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் தேர்வு செய்யப்படும் சபாநாயகருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர மறுத்தது. தற்போது சபாநாயகருக்கு ஆதரவு இல்லாததால் சபாநாயகர் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுகிறது