தமிழகத்தில் என்ஜினீயரிங் சேர்க்கையில் விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முடிவடையும் சேர்க்கை பதிவை தவறவிடாமல் மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கடந்த மே 7ஆம் தேதி தொடங்கிய என்ஜினீயரிங் படிப்பு சேர்க்கைக்கு இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டில் 11 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் தொழிற்சாலைகளின் தேவை மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பொருத்து 12 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகமாகுகின்றன. இதனால் 720 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதில் 7.5% உள் ஒதுக்கீட்டில் 54 இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க www.tneaonline.org இணையதளத்தை பயன்படுத்தலாம். மேலும் விளக்கங்களுக்கு 110 மாணவர் சேவை மையங்கள், 1800-425-0110 என்ற இலவச எண் மற்றும் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.