நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

April 13, 2023

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான பிஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 2023ம் ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (NEET) மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி […]

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

எம்பிபிஎஸ், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறை படிப்புகளான பிஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎஸ்எம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 2023ம் ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (NEET) மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்க உள்ளது. இதற்காக மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் அறிவித்தது.

மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வசதியாக 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று நள்ளிரவு 11.30 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu