தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் 54 சுங்க சாவடிகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட சுங்க சாவடிகளில் ஏப்ரல் மாதமும் மீதமுள்ள சுங்க சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படும்.
இதில் நடப்பு ஆண்டுக்காக திண்டுக்கல், திருச்சி,சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இதில் கார், வேன், ஜீப் இலகு ரக வாகனங்கள், லாரி பஸ்,இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் சென்று வர வழக்கமான கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்க படும். மேலும் மாதாந்திர கட்டணமும் உயர்ந்துள்ளது. இவை மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்க சாவடியில் அமலுக்கு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுங்க சாவடிகளுக்கு தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.