தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் நாளை முதல் உயர்கிறது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிக்க குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.