தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு

November 12, 2022

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை தொடர்ந்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூன் முதல் பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி அறுவடை பணி அதிகமாக இருந்தது. இதனால், தக்காளி எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன், குறைவான விலைக்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனையாகி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்தாலும், தக்காளி அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று […]

தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை தொடர்ந்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூன் முதல் பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி அறுவடை பணி அதிகமாக இருந்தது. இதனால், தக்காளி எண்ணிக்கை அதிகமாக இருந்ததுடன், குறைவான விலைக்கு விற்பனையானது. ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனையாகி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வந்தாலும், தக்காளி அறுவடை பணி துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் அதிகமாகியுள்ளது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12க்கே ஏலம் போனது. இருப்பினும், தக்காளி வாங்க வியாபாரிகள் அதிகம் முன் வராததால் தக்காளிகள் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu