கோயம்பேட்டில் தக்காளி விலை உயர்வு

August 8, 2025

கடந்த மாதம் முதலே கோயம்பேட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மழையால் உற்பத்தி குறைந்ததால், வரத்து குறைவு விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், விவசாய நிலங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மொத்த சந்தையில் கிலோவுக்கு 45 ரூபாய் என உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 உயர்வும் […]

கடந்த மாதம் முதலே கோயம்பேட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மழையால் உற்பத்தி குறைந்ததால், வரத்து குறைவு விலையேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், விவசாய நிலங்களில் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மொத்த சந்தையில் கிலோவுக்கு 45 ரூபாய் என உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.10 உயர்வும் ஏற்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை 60 ரூபாயாக உள்ளது. விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. வியாபாரிகள் கூறுகையில், வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை சீராகும் என தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu