பிஜி தீவின் உயரிய விருதான 'கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி' என்ற விருதை பிரதமர் மோடிக்கு பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார்.
பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அச்சமயம் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். மோர்ஸ்பி நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிஜி தீவின் உயரிய விருதான 'கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி' என்ற விருதை பிரதமர் மோடிக்கு பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, பப்புவா நியூகினியா நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோகு' என்ற விருதை கவர்னர் ஜெனரல் சர் பாப் டாடே, பிரதமர் மோடிக்கு வழங்கினார்.














