இந்தியாவின் நவம்பர் மாத பாமாயில் இறக்குமதி, முந்தைய மாதத்தை விட 29% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நவம்பர் மாத இறக்குமதிக்கான ஆர்டர்கள் அக்டோபர் மாதம் பதிவு செய்யப்படும். இந்நிலையில், அக்டோபர் மாதத்தில், சோயா ஆயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை விட, ஒரு டன் பாமாயில் 500 டாலர்கள் குறைவாக விற்கப்பட்டதால் இறக்குமதி உயர்ந்துள்ளதாக எண்ணெய் டீலர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில், பாமாயில் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து பெரும்பான்மையான பாமாயில் இறக்குமதி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மாதம், 1.14 மில்லியன் டன் அளவில் பாமாயில் இறக்குமதி பதிவாகியுள்ளது. மேலும், சோயா ஆயில் இறக்குமதி 36% குறைந்தும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 10% உயர்ந்தும் பதிவாகியுள்ளது.