சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

October 11, 2022

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிரா சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவை சேர்ந்த அதிருப்தியாளர்கள் குழு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லாத்கே சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் […]

சிவ சேனா கட்சிக்கு தீப்பந்தம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்ட சபையில் பெரும்பான்மையை இழந்ததால் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனாவை சேர்ந்த அதிருப்தியாளர்கள் குழு பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மும்பை அந்தேரி கிழக்கு தொகுதியை சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லாத்கே சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆளும் சிவசேனா அதிருப்தி குழு-பாஜ கூட்டணி சார்பில் முர்ஜி படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சிவ சேனா கட்சியின் சார்பில் மறைந்த ரமேஷ் லாத்கே மனைவி ருத்துஜா லாத்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யார் உண்மையான சிவசேனா, யாருக்கு வில் அம்பு சின்னம் என்பது குறித்து இரு தரப்பும் மனு தாக்கல் செய்தது. திடீரென சிவசேனா கட்சியின் வில்-அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்து இருக்கிறார். தேர்தலை முன்னிட்டு தற்காலிக தீர்வாக உத்தவ் தாக்கரே தரப்பில் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தார்.

அதோடு, சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்களது அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தையும் , சிவ சேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே என்கிற பெயரையும் ஒதுக்கித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu