சென்னை தீவுத்திடலில் சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் 47-வதுசுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஹோட்டல் தமிழ்நாடு உணவகம், 10 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், தீவுத்திடல் முகப்பில் வள்ளுவர் கோட்டம் கல் தேர், மாமல்லபுரம் சிற்பம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
மேலும், 27 அரசுத் துறைகள், 21 பொதுத் துறைகள் என 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரம் சதுர அடிபரப்பளவில் பேய் வீடு, 3டி திரையரங்கம், டெக்னோ ஜம்ப், ஸ்கிரீன் டவர், ராட்சத ராட்டினம், நவீன கேளிக்கை சாதனங்கள், பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில், மீன் காட்சியகம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்டபல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.














