ஹா லாங் வளைகுடா பகுதியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 34 பேர் உயிரிழந்தனர்; திடீரென வீசிய சூறைக்காற்றால் விபத்து நிகழ்ந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமின் தலைநகர் ஹனோயிலிருந்து ஹா லாங் வளைகுடாவை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற படகு, கடலோர பகுதியில் திடீரென கவிழ்ந்து கடுமையான விபத்தில் சிக்கியது. பயணித்தவர்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் 11 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் இந்த கோர சம்பவத்தில் 8 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். தற்போது 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீட்புக் குழுவினரின் தகவலின்படி, திடீரென வீசிய சூறைக்காற்றே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், விபத்தின் முழுமையான காரணங்களை கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.