பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு நாளை வருகை தந்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1ம் தேதி வரை தியானத்தில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரிக்கு வந்து அங்கே கடலில் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 1ம் தேதி வரை தியானத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்து பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். பின்னர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு கார் மூலம் படகு மூலம் கடலுக்கு சென்று விவேகானந்தர் பாறைக்கு செல்ல உள்ளார். அங்கு மூன்று நாட்கள் தியானத்தை முடித்துக் கொண்டு 1ம் தேதி தியான மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறார். பின்பு படகு மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று அங்கு இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதனை முன்னிட்டு கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் விவேகானந்தர் மண்டபத்திற்கு நாளை முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது