கலிபோர்னியாவைச் சுற்றியுள்ள இந்தியன் க்ரீக் நீர்த்தேக்கம் உட்பட பல்வேறு மீன்பிடி பகுதிகளில் ஒரு வகை பாசிப் பூக்கள் (HABs) காணப்படுகின்றன. அவை மக்களை நோய்வாய்ப்படுத்துவதாக ஒ௫ செய்து அறிக்கை கூறுகிறது.
சான் பிரான்சிஸ்கோ விரிகுடா, க்ளியர் லேக், லேக் க்ரோலி மற்றும் பிரிட்ஜ்போர்ட் ரிசர்வாயர் ஆகியவற்றில் உள்ள கலிபோர்னியா நீர் தர கண்காணிப்பு கவுன்சிலானது சிவப்பு அலையில் தீங்கு விளைவிக்கும் பாசிப் பூக்கள் இ௫ப்பதைக் கண்டறிந்துள்ளது. நீர்நிலையில் வசிக்கும் இந்த பாசிகள் வேகமாக வளர்ச்சியடைகிறது. இது நீரின் ஊட்டச்சத்து அல்லது வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் தூண்டப்படுகிறது. இந்த பாசிகள் நச்சுகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் மக்களை நோய்வாய்ப்படுத்தும். அதோடு கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகளை கூட கொல்லும் திறன் கொண்டவை. மேலும் இந்த பாசிப் பூக்கள் பொது நீர் ஆதாரங்களின் சுவை மற்றும் வாசனையையும் பாதிக்கிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அறிக்கைப் படி, இந்த நச்சுகள் வாய்வழியாக விழுங்கப்படலாம், சுவாசிக்ப்படலாம் அல்லது தோல் வழியாக மனித உடலுக்குள் புகலாம். பிறகு மனிதர்களின் இரைப்பை குடல் பிரச்சினைகள், காய்ச்சல் போன்ற அறிகுறிகள், தோல் வெடிப்புகள் மற்றும் ஒழுங்கற்ற சுவாசத்தை உருவாக்கும். இருப்பினும், இது விலங்குகளில் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம் என கூறுகிறது.