டொயோட்டா கார்கள் விலை 1% உயர்வு

July 7, 2023

டொயோட்டா நிறுவனம், தனது கார்களின் விலைகள் 1% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் உற்பத்தி பொருள் விலைகளை கருத்தில் கொண்டு, இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், இந்த விலை ஏற்றம், வாடிக்கையாளர்களை பாதிக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

டொயோட்டா நிறுவனம், தனது கார்களின் விலைகள் 1% வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்படுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் உற்பத்தி பொருள் விலைகளை கருத்தில் கொண்டு, இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், இந்த விலை ஏற்றம், வாடிக்கையாளர்களை பாதிக்காத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டொயோட்டா உறுதியளித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu