டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம், ஜனவரி மாதத்தில் வாகன விற்பனையில் 175% உயர்வை பதிவு செய்துள்ளது. ஜனவரி மாதத்தில், இந்த நிறுவனத்தின் வாகனங்கள், மொத்தமாக, 12835 எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஆண்டில் இது வெறும் 7328 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிகரித்து வரும் வாகனத் தேவைகளை ஈடுகட்டும் வகையில், டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தின் பெரும்பாலான கார் மாடல்கள் விற்பனையில் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், டொயோட்டா நிறுவனம், தனது ஹிலக்ஸ் மற்றும் இன்னோவா கிறிஸ்ட்டா மாடல்களுக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஹைகிராஸ் எஸ்யூவி கார்களின் விநியோகத்தையும் இந்தியாவில் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இது குறித்து நிறுவனத்தின் விற்பனை மற்றும் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் அதுல் சூட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.