டொயோட்டா நிறுவனம் தனது மாதாந்திர வாகன விற்பனையில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில், டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை எண்ணிக்கை 27474 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 19608 ஆக இருந்தது. அதன்படி, வாகன விற்பனையில் 40% உயர்வு பதிவாகியுள்ளது அத்துடன், டொயோட்டா வாகன விற்பனை வரலாற்றில் இதுவே உச்சபட்ச மாதாந்திர விற்பனை ஆகும். கடந்த ஜூன் மாதத்தில் டொயோட்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் உள்நாட்டு விற்பனை 25752 ஆகவும், ஏற்றுமதி 1722 ஆகவும் சொல்லப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் டொயோட்டா வாகனங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதாக டொயோட்டா வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி சபரி மனோகர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.