டொயோட்டா நிறுவனம் தனது சமீபத்திய கார் உற்பத்தியில் முறையான பரிசோதனைகளை நிகழ்த்தவில்லை என தெரிவித்துள்ளது. இதனால், விபத்துக்கள் அல்லது உயிரிழப்புகள் நேரலாம் என அஞ்சப்படுவதால் வாகனங்களின் சிப்மென்ட்களை தடுத்துள்ளது.
டொயோட்டா குழுமத்தின் கீழ் இயங்கும் கிளை நிறுவனங்கள் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த நிறுவனங்கள் முறையான பரிசோதனை செய்யாமல் விட்டதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 10 மாடல் கார்கள் இந்த உற்பத்தி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. லேண்ட் க்ரூஸர் 300, ஹையேஸ் ஆகிய கார் மாடல்களும் இதில் அடங்கும். இதன் விளைவாக, 36500 டொயோட்டா வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் தலைசிறந்த வாகன உற்பத்தியாளராக டொயோட்டா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்த நற்செய்தி வெளியான மறுதினம் உற்பத்தி குறைபாடு குறித்த செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.














