கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வர்த்தக இடைவெளி 18.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது நடப்பு நிதி ஆண்டில் பதிவாகும் அதிகபட்ச வர்த்தக இடைவெளி என்று இந்தியாவின் வர்த்தக செயலாளர் சுனில் பரத்வாள் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளி 17.5 ல் இருந்து 18.7 பில்லியன் டாலர்கள் அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் சரக்கு இறக்குமதி 12.2% உயர்ந்து 60.11 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், சரக்கு ஏற்றுமதி 11.9% உயர்ந்து 41.4 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், இந்தியாவின் சேவை ஏற்றுமதி 32.35 பில்லியன் டாலர்களாகவும், சேவை இறக்குமதி 16.05 பில்லியன் டாலர்களாகவும் பதிவாகியுள்ளது.