அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்

October 10, 2023

சென்னை அண்ணா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்து சோதனை முயற்சி நடைபெறுகிறது. சென்னையில் அண்ணா சாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மித் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, அண்ணாசாலை ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட் சாலை செல்லலாம். ஆனால் ஒயிட் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை. பட்டுல்லாஸ் பாதை ஒரு வழியாக மாற்றப்பட்டு, ஒயிட் சாலை பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் […]

சென்னை அண்ணா சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்து சோதனை முயற்சி நடைபெறுகிறது.
சென்னையில் அண்ணா சாலையில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மித் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, அண்ணாசாலை ஸ்மித் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட் சாலை செல்லலாம். ஆனால் ஒயிட் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்ல அனுமதி இல்லை.
பட்டுல்லாஸ் பாதை ஒரு வழியாக மாற்றப்பட்டு, ஒயிட் சாலை பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை செல்லலாம். ஆனால் அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட் சாலை செல்ல அனுமதி இல்லை. ஜி.பி சாலை - பென்னி சாலை சந்திப்பில் இருந்து அண்ணா சாலை சென்று ஒயிட் சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் பட்டுல்லாஸ் சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. இவை நேராக ஸ்மித் சாலை சந்திப்பு சென்று இடது புறம் திரும்பி ஸ்மித் சாலை, ஒயிட் சாலை செல்லலாம். இதே போல் திரு.வி.க சாலை - ஒயிட் சாலை, அண்ணாசாலை - பட்டுல்லாஸ் சாலை ஆகிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

தமிழகம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu