சென்னை மெட்ரோ ரெயில் பணிக்காக மயிலாப்பூரில் நாளை முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு, லஸ் சந்திப்பு, சாந்தோம் நெடுஞ்சாலை, மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பு, மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கச்சேரி சாலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.