மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்படுவதால் மாம்பலம் பிரதான சாலையில் இன்று முதல் அடுத்த ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மெட்ரோ நிலையம் மேற்கொள்ள உள்ள கட்டுமான பணிகளுக்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் 25.12.2022 முதல் ஒரு வார காலத்திற்கு நடைபெற்றது.
இதையடுத்து 9.01.2023 இன்று முதல் 07.04.2024 வரை 15 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. மாம்பல பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.