கோவா புதிய விமான நிலையத்தில் போக்குவரத்து தொடங்கியது

January 6, 2023

கோவா புதிய விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோவாவின் வடக்கே உள்ள மோபாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 11-ந்தேதி திறந்து வைத்தார். இதில் நேற்று முதல் விமான போக்குவரத்து தொடங்கியது. அதன்படி ஐதராபாத்தில் இருந்து 179 பயணிகளுடன் முதல் பயணிகள் விமானம் நேற்று காலையில் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த […]

கோவா புதிய விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவாவின் வடக்கே உள்ள மோபாவில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 11-ந்தேதி திறந்து வைத்தார். இதில் நேற்று முதல் விமான போக்குவரத்து தொடங்கியது. அதன்படி ஐதராபாத்தில் இருந்து 179 பயணிகளுடன் முதல் பயணிகள் விமானம் நேற்று காலையில் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமானத்தில் வந்த பயணிகளை முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், மத்திய-மாநில அரசுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை. இன்று முதல் கோவாவில் 2 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என மகிழ்ச்சி தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu