டெல்லி-பாரமுல்லா இடையே ரெயில் சேவை

January 3, 2025

குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி-பாரமுல்லா இடையிலான ரெயில் சேவையை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மற்றும் காஷ்மீரின் பாரமுல்லா இடையே நேரடி ரெயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், ரூ.37,012 கோடி மதிப்பீட்டில் 272 கி.மீ. தூரம் கொண்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன்மூலம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் வழித்தடம் அமையும். இந்த திட்டத்தின் கீழ், 17 கி.மீ. தூரம் கொண்ட கத்ரா-ரியாசி இடையே உள்ள ரெயில் பாதை இறுதி […]

குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி-பாரமுல்லா இடையிலான ரெயில் சேவையை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி மற்றும் காஷ்மீரின் பாரமுல்லா இடையே நேரடி ரெயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில், ரூ.37,012 கோடி மதிப்பீட்டில் 272 கி.மீ. தூரம் கொண்ட ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன்மூலம் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் வழித்தடம் அமையும். இந்த திட்டத்தின் கீழ், 17 கி.மீ. தூரம் கொண்ட கத்ரா-ரியாசி இடையே உள்ள ரெயில் பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, மின்சார வசதி கொடுக்கும் பணிகள் முடிவு பெறும் விரைவில் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் முடிவுக்கு வந்தால், 26-ந்தேதி குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி-பாரமுல்லா இடையிலான ரெயில் சேவையை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரெயில் சேவை வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா பகுதிக்கு பயண வசதிகளை வழங்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.இந்த சேவையின் தொடக்க விழாவுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu