சென்னை பெங்களூர் இடையே ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 1,2,8,9 ஆகிய தேதிகளிலும், மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 2,3,9,10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருப்பதியில் இருந்து சென்ட்ரல் வரும் கருடாதிரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் […]

பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - பெங்களூர் இடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 1,2,8,9 ஆகிய தேதிகளிலும், மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 2,3,9,10 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருப்பதியில் இருந்து சென்ட்ரல் வரும் கருடாதிரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூலை 2,9 ஆகிய தேதியில் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் இதே போன்று பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 2, 9,30 மற்றும் ஆகஸ்ட் 6,13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர் செல்லும் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 3,10,30, 31 மற்றும் ஆகஸ்ட் 6,7,13,14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu