கடற்படையில் சேர உள்ள அக்னி வீராங்கனைகளுக்கான பயிற்சி ஒடிசாவில் துவங்கவுள்ளது

August 25, 2022

'அக்னிபத்' திட்டம் வாயிலாக கடற்படைக்கு தேர்வாகும் அக்னி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க ஒடிசாவின் ஐ.என்.எஸ்., சில்கா பயிற்சி மையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. மத்திய அரசின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் அக்னி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படும். பின், திறன் அடிப்படையில் 25 சதவீத வீரர்கள் மட்டும் 15 ஆண்டு பணியை தொடர அனுமதிக்கப்படுவர். நடப்பு ஆண்டில் முப்படைகளுக்கும் […]

'அக்னிபத்' திட்டம் வாயிலாக கடற்படைக்கு தேர்வாகும் அக்னி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க ஒடிசாவின் ஐ.என்.எஸ்., சில்கா பயிற்சி மையம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

மத்திய அரசின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பணிகளுக்கு அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் அக்னி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் பணி வழங்கப்படும். பின், திறன் அடிப்படையில் 25 சதவீத வீரர்கள் மட்டும் 15 ஆண்டு பணியை தொடர அனுமதிக்கப்படுவர்.

நடப்பு ஆண்டில் முப்படைகளுக்கும் சேர்த்து 46 ஆயிரம் அக்னி வீரர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். கடற்படை மற்றும் விமானப்படைக்கு தலா 3,000 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இதில், கடற்படை பணிக்கு 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. குறிப்பாக 82 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். கடற்பணிக்கு தேர்வாக உள்ள 3,000 அக்னி வீரர்களில், 600 பேர் பெண்கள். இவர்களுக்கான பயிற்சி நவம்பர் 21ல் ஒடிசாவில் துவங்க உள்ளது.

இப்பயிற்சியில், பெண்களுக்கான வசதிகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி முடிந்து பணியில் சேரும் வீராங்கனைகளில் சிலர் விமானம் தாங்கி விக்ராந்த் போர்க் கப்பலில் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், கடற்படையில் பெண்களின் ஆதிக்கத்தை 2024க்குள் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu