ரஷியாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க மாணவர்களுக்கு பயிற்சி

August 22, 2023

ஆளில்லா ராணுவ விமானங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து ரஷ்ய இளைஞர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று ரஷ்ய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை வரும் கல்வியாண்டில் பாடத்திட்டமாக சேர்த்துள்ளது. கடந்த நவம்பரில் 2023 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு ராணுவ பயிற்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் பாடத்திட்டம் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தினமும் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய பாதிக்கப்படுவதால் இந்த பாடத்திட்டத்தின் பயன்பாடு முக்கியமானதாக […]

ஆளில்லா ராணுவ விமானங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து ரஷ்ய இளைஞர்கள் கற்றுக் கொள்வார்கள் என்று ரஷ்ய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை வரும் கல்வியாண்டில் பாடத்திட்டமாக சேர்த்துள்ளது.

கடந்த நவம்பரில் 2023 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு ராணுவ பயிற்சி மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ட்ரோன் பாடத்திட்டம் 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தினமும் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் ரஷ்ய பாதிக்கப்படுவதால் இந்த பாடத்திட்டத்தின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது குறித்து ரஷ்ய கல்வி அமைச்சகம் கூறுகையில், இந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொள்வார்கள். அதோடு அவர்கள் ட்ரோன் இயக்குவதில் நடைமுறை பயிற்சிகளை மேற்கொள்வார்கள். எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் கற்றுக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu