தென் மாவட்டங்களில் கன மழை அதிகமாக பெய்து வருவதால் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் ரயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு ரயில்களை இயக்க முடியவில்லை. அதேபோல மதுரைக்கு சென்னையில் இருந்து ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முழுவதும் ஆக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து ஆகிறது. இந்த ரயில் திருச்செந்தூரிலிருந்து எழும்பூருக்கு செல்ல இயலவில்லை. இதனால் ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.